Tuesday, September 27, 2016

விரதங்கள் அதன் வகைகள் பாகம் – 1

விரதங்கள் அதன் வகைகள்  பாகம் – 1 

     எனது  மனைவி  சௌமிய நம்ப முடியாத அளவிற்கு விரதங்கள் இருப்பா.. கிழமைகள் திதிகள் என்று  பல  பெயர்களில் சாப்பிடாமல் இருப்பா!! (நாங்க >>என்பசங்க அடங்கா நாக்குஉடன் பிறந்தவர்கள் ) சில மாலை வேளையில் நாள் தெரியாமல் ஹோட்டல் போன.. சாப்பிட மாட்டாள்..  சரி இது என்ன என்று  படிக்க ஆரம்பிச்சேன்

விரதம் என்பது தனிமனித கட்டுப்பாடு .. நமது சனாதன மதத்தில் நமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு  ப்ரோகிரதரோ ... ஏன்  மந்திரமோ தேவை இல்லை என்கிற ஒரு வழிபாட்டு முறை .. நம்மை கட்டுப்படுத்திக்கொண்டு இறைவனை வேண்டுவது எப்படி.. என்பதே விரதம் ..

ஆண்களுக்கு பலவித மந்திர அனுஷ்டானங்கள் சொல்லப்பட்டு இருப்பதால் பெரும்பாலும் விரதங்கள் பெண்களாலே அனுநிஷ்டக்கப்படுகின்றன. (ஆண்களும் இதை  செய்யலாம் காரணம் இன்று ஆண்களுக்கும் தங்களுக்கு  விதிக்கப்பட்ட பல இறை அனுஷ்டானங்கள் தெரியவில்லை )

உணவு மறுத்தல் என்பது என்ன ??? அதான் நிறைய பேர் சாப்பாட்டுக்கு இல்லாம இருக்கிறார்களே அது பாவத்தின் சம்பளம் வறுமைதானே !!
why should we starve ourseleves to get the atraction of god? is God a sadist to see us starve!!பல படித்த மேதாவிகள் கேள்விகள் கேட்க கூடும்!!

இறைவனை அடைய மனசு ஒருநிலை பட வேண்டும் .. தியானம் பண்ணனும் (i always do meditation yar ) என்று பலர் பேச கேட்டு இருப்பீர்கள்!!

மனசு ஒருநிலை பெற ஒரே வழி உணவை மறுத்தல்தான்!!

இந்த காலத்தில் உடம்பை நன்றாக வலுவாக வைத்து கொள்ள ஜிம் போகனும்.. நம்மால் சாதரணமாக தூக்க  முடியாத எடையை தினமும் அதிகப்படியாக தூக்கி தூக்கி .. நமது உடம்பும் அட இவன் இப்படி நிறைய  எடை தூக்குகிரானே என்று தானே தசைகள் வளர்ச்சி அடைவதுதான் ஜிம்மின் முதல் பாடம் .. ( you increase your load day by day which make your muscles split and growup  to adopt your weight regime )

அதேபோல மனசு .. இதை அடக்க என்ன வழி .. வேறுமனே ஒரு இடத்தில் ஒக்காந்து இருந்தா அடங்குமா என்ன ??? (சட்டி சோறு தின்னா உடம்பு குண்டா ஆகும் ஒழிய  பழனி படிக்கட்டு மாறி six packs வருமா என்ன?)

மனசு அடங்க ... “பசி வந்தா பத்தும் பறந்து போகும்” – ஆம் நமக்குள்  இருக்கும் எல்லா பிடிமானங்களும்  விட்டு போகும் .. மனசு எதையும் விரும்பாது.. அதனால் உணவை தவிர்த்தால்  மனசு கடிவாளம் போட்ட குதிரை மாறி அமைதியுறும் , உணவும் மனசும் பின்னி பிணைந்தது  , நாம் சாப்பிடும் உணவின் மூலமாகவே நமது எண்ண ஓட்டங்கள் அதன் வேகங்கள் உணரப்படுகின்றது .. (இது சத்வ ரஜோ தமஸு உணவுகள் .. அது தனி பதிவு இங்கே வேண்டாம் )

எனவே உணவை குறைத்து நமது மனம் ஒடுங்கிய உடன் வெளியில் எங்கும் சுற்றாமல் இறை சிந்தையுடன் (தங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்கள் இல்லை ,என்றால் ... ஸ்ரீராமஜெயம் எழுதி கொண்டு இருத்தல் விரதம் !!) சாப்பிடாமல் காலையில் இருந்து டிவி சீரியல் பார்ப்பது, குமுதம் ஆனந்தவிகடன் படிப்பது .. தூங்குவது ... முழுசும்  வீண் ..

மகாபாரதத்தில்  பீஷ்மர் தருமரிடம் ஏகாதசி விரதத்தை மிகவும் புகழ்ந்து பேசுகிறார்.. மகாபாரதத்தில் பல விரதங்கள பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது ..அவற்றையெல்லாம் வரிசையாக எழுத போகிறேன் .. அவை பல ஆயிரம் இருக்கிறது .. ஆனால் சுமார் 160 தெளிவாக விவரிக்கபட்டு உள்ளது!!

உலகில் உள்ள அணைத்து மதங்களுமே உணவை தவிர்த்து மனதை அடக்கும் முறையை அறிந்து இருந்தனர் . முஸ்லிம்கள் ஒரு மாசம் உணவை தவிர்த்து இருப்பதும் .. கிருத்துவர்கள் பல காலமாக இதை செய்வதும் நாம் அறிவதே (இதை விவரணமாக எழுத போவதில்லை காரணம் இந்த பதிவு பெரிதாக ஆகிவிடும் )

விரதங்கள் தொடங்கும் முறை :-

பலவிதமான நாட்களை சொல்லி (அதை இங்கே எழுதினால் அஞ்சு பக்கம் விளக்கம் கொடுக்க வேண்டும் ) சுபதின நாட்களில் விரதங்களை தொடங்க வேண்டும்!! தனிதனி தெய்வ விரதகளில் அதை விளக்குகிறேன் ...

பெண்கள் இவைகளை செய்யும் முன் தனது கணவன் மற்றும் திருமணம் ஆகாவிடின் தந்தையின் அனுமதியும் ஆசியும் பெறவேண்டும் .

விரதநாளில் தவிர்க்க வேண்டியவை மாமிசம், தாம்பூலம் ,ஆண் பெண் சம்போகம் , சீரிய படுக்கை ....(ஏசி அறை.. சுகமான படுக்கை கூடாது )

விரதங்கள் .. எப்படி இருக்க போகிறீர்கள் என்பதை 11  விதமாக தொகுத்து வைத்து இருக்கிறார்கள் ... எப்படி நீங்கள் உண்ணாமல் இருப்பீர்கள் , எவ்வளவு நாள் , உண்ணும் உணவு எப்படி இருக்கும் என்பதை பற்றி ..

விரதம் இருக்கும் தேவதைகள், இறையானார்கள் அவர்களை வணங்கும் காலம் பற்றி சுமார் 160 விதங்கள் .. முதலில் உணவு பற்றி பார்ப்போம் ...

1.  யாசிதம் :-  பகலில் இரண்டு வேலை உண்ணுதல்
2.  பாதக் கிரிச்சனம் :- நல்லுணவு கொண்டிருத்தல்
3.  பன்னகிரிச்சனம் :- வில்வம், அரசு, அத்தி  இவைகளின் தளிர்களில் ஒன்றை நீரில் தேய்த்து உண்டிருத்தல்
4.  சௌமியகிரிச்சனம் :- ஒரு பகல் பிண்ணாக்கு, பால், மோர், நீர், பொரிமா இவற்றுள் ஒன்றை உண்டிருத்தல்
5.   அதிகிரிச்சணம் :- மூன்றுநாள் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டும், அஃது இன்றியும் இருத்தல்
6.   கிரிச்சனாதி கிரிச்சனம் :-  இருபத்தொரு நாள் பாலே உண்டிருத்தல்
7.   பிரசாபத்திய கிரிச்சனம் :- மூன்று நாள் காலை, மூன்றுநாள் இரவு, மூன்று நாள் இடைவேளை மூன்றுநாள் உணவின்மையுடன் இருத்தல்
8.   பார்க கிரிச்சனம் :- பன்னிரண்டு நாள் உணவின்றி இருத்தல்
9.   சாந்தபன கிரிச்சனம் :- 1-நாள் கோசலம் 1-நாள் கோமயம் 1-நாள் பால் 1-நாள் தருப்பை நீர் 1-நாள் ஊன் இன்றி இருத்தல்
10.   மகசாந்தபன கிரிச்சனம் :- மேற்சொன்னவைகளில் ஒவ்வொன்றையே கொண்டிருத்தல் (9 இல் சொல்லப்பட்ட ஏதாவது ஒன்றையே உண்டு வாழ்தல் )
11.   சாந்திராயணம் :- சுக்லபக்ஷத்து முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு பிடி அன்னம் தினமும் குறைத்து கொண்டே வந்து  கிருஷ்ணபக்ஷம் முதல் ஒவ்வொரு பிடி பிடியாக  உயர்த்தி உண்டு இருத்தல் .


இப்படி  11 விதமாக உணவு உண்பதை நமது முன்னோர்கள் கைகொண்டு வந்து இருக்கிறார்கள் ..

இறை வழிபாட்டு முறையில் சுமார் 160 வகைகளுக்கு மேலாக இருந்தவற்றை பார்ப்போம் ..

1. விநாயக விரதம் :- வைகாசி மாதத்துச் சுக்லபக்ஷத்து முதல் சுக்கிர வாரம் தொடங்கி சுக்கிர வாரந்தோறும் விநாயகமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பது ..

2. விநாயாகசஷ்டி விரதம் :- இது கார்த்திகை மாதத்துக் க்ரிஷ்ணபக்ஷப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்லபக்ஷ சஷ்டிஈறாக (21)  நாள்களும் விநாயகரை எண்ணி அனுஷ்டிக்கும் விரதம் .. இதில் (21) இழைகளலாகிய காப்பு நாணினைப் புருஷர் பெண்கள் முறையே வல இடக்கரங்களில் அணிந்து விரத சமாப்தியில் (முடியும் காலத்தில்) தக்ஷினைகளை (தருமங்கள் செய்து) உணவு உண்ணவேண்டும் !!

இவை போல ஒரு 160 விரதம் இருக்கு .. அதை வரும் நாட்களில் எழுத இருக்கிறேன் ..

தொடர்ந்து பார்ப்போம் ...

விஜயராகவன் கிருஷ்ணன்